தமிழகத்தில் அரசு பள்ளி 6 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் இணையவழியில் பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இணையவழி வகுப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த வருடம் முதல் தற்போது வரை மாணவர்களுக்கு வகுப்புகள் இணையதளம் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் நோக்கில் கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டு வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசுப்பள்ளி 6 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் இணைய வழியில் பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்களை செயல்படுத்தியது. அதே போல் நடப்பாண்டும் இத்திட்டங்களை தொடர அந்த நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
18 மாவட்டங்களில் புதிதாக அறிவியல் ஆய்வு மையம் அமைக்கவும் அனுமதி கேட்டுள்ளது. இது தவிர, அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களை இணையவழியில் கற்று தரவும் அந்நிறுவனம் அனுமதி கோரியது. அதற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அகஸ்தியா அறக்கட்டளைக்கு தேவையான ஒத்துழைப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.