இந்தியாவில் அகில இந்திய மருத்துவ படிப்புகளில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு அனுமதிக்கதக்கதல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்க முடிவு செய்யப்பட்டு நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக கோரியது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என்பது சரியானது. மேலும் அகில இந்திய மருத்துவ படிப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அனுமதிக்கதக்கதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.