Breaking

Thursday, August 12, 2021

இந்தியாவில் 15 கோடி குழந்தைகளுக்கு முறையான கல்வி இல்லை – மத்திய அமைச்சர்!

சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது எழுத்தறிவு பெற்ற மக்கள் புள்ளிவிவரங்கள் 80 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் இன்னும் 25 வருடங்களில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

முறையான கல்வி:
இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் தொண்டு பள்ளிகள் அங்கன்வாடிகளில் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் படிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 35 கோடி. இந்தியாவில் மொத்தம் 3 முதல் 22 வயதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை 50 கோடி.

தற்போது எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 15 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முறையான கல்வியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு விலகிய மாணவர்களை மீண்டும் கல்வி முறைக்கு கொண்டு வர விரும்புவதாகவும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த நாளில் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதம் ஆகிறது. சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிய நிலையில் எழுத்தறிவு பெற்ற மக்களின் புள்ளிவிவரங்கள் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலவரப்படி 20 சதவீதம் மக்கள் அல்லது சுமார் 25 கோடி பேர் கல்வியறிவு கான முதன்மை வரையறைக்குக் கீழே உள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் பொழுது குறிப்பிட்ட இலக்கினை அடைய வேண்டும் என்றும் அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக அரசு கல்வி மற்றும் திறன் துறைகளை இணைத்துள்ளது மட்டுமல்லாமல் நல்ல வாழ்வாதாரத்திற்கான புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog