பிபிஎஸ் சம்பள அமைப்பைப் பின்பற்றும் வங்கியின் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள காலாண்டின் அகவிலைப்படி உயர்வு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் DA:
மத்திய அரசு, 2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத காலாண்டிற்கான தொழிலாளர்களுக்கான சராசரி அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை (AICPIN) வெளியிட்டுள்ளது. இந்த AICPIN விவரங்களின் அடிப்படையில், வங்கி ஊழியர்களுக்கான DA கணக்கிடப்படுகிறது. DA நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் உயர்த்தப்படுகிறது.
வங்கியின் ஊழியர்கள் நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் பணியில் இருப்பதை பொறுத்து அகவிலைப்படி நியமிக்கப்படும். அதன்படி, வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) கடந்த காலாண்டில் 2.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 27.79%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த DA உயர்வானது 11 வது பிபிஎஸ் சம்பள அமைப்பின் அடிப்படையில் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கு அமலுக்கு வருகிறது. 10 வது பிபிஎஸ் ன் அடிப்படையில், DA 3% அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு டிஏ உயர்வு அமலில் இருக்கும். இதனால் 8 லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள். வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் அடிப்படை ஊதியமும் உயர்த்தப்படும். 1.11.2017ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தில் 27.79 சதவிகிதம் DR வழங்கப்படுகிறது. வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய விதிமுறைகளின் படி இந்த கணக்கீடு செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.