மாநில வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு – முழு விபரம் இதோ!
கடுமையான கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி ஹரியானா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் மூடப்பட்டது. தற்போது, ஒவ்வொரு நாளும் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பல மாநில அரசுகள் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கும் முடிவெடுத்துள்ளது. ஹரியானா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை அனுமதித்துள்ளது. ஆனால், நாட்டில் கொரோனா பரவலின் 3ம் அலை நிச்சயம் இருக்கும் என்றும் அதன் பாதிப்புகள் மிக தீவிரமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையும் வரை குழந்தைகளின் உயிரை பணயம் வைக்க முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதேபோல், கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர், பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்படுவதால், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் ஜூலை 26 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும். மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் எடுக்கப்படும். ஆரம்ப வகுப்புகளுக்கு பள்ளிகள் நிலைமையைப் பொறுத்து படிப்படியாக மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் அரசு கல்வி நிறுவனங்களை ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்வதாக ஜூலை 2ம் தேதி அறிவித்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும். குறிப்பிட்ட பகுதியில் ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாமல் இருந்தால் மட்டுமே பள்ளிகள் திறக்க வேண்டும். இப்பகுதிக்கான உள்ளூர் பிரதிநிதிகள், கிராமங்களுக்கு கிராம பஞ்சாயத்து, நகர்ப்புறங்களுக்கான கவுன்சிலர் ஆகியோருடன் பெற்றோர்களும் ஒப்புதல் அளித்தால் தான் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படும்.
மேற்கு வங்கம்:
கொரோனா தொற்று நோயின் 3ம் அலை குறித்த அச்சம் இருப்பதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. பாதிப்புகள் குறைந்து நேரடி வகுப்புகள் தொடங்கும் போது, முதலில் உயர் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு வகுப்புகள் இருக்காது. இருப்பினும், இது குறித்த இறுதி முடிவு அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.