தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் அனுப்பபடும் எனவும் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியீடு:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த வருடம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து வயதினரும் கல்வி பெறும் நோக்கிலும், பணிக்கு செல்பவர்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கிலும் திறந்தநிலை பல்கலைகள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். எல்லோர்க்கும் எப்போதும் கல்வி என்ற கொள்கையை திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகிறது. இந்த தொலைதூர பல்கலைக்கழகங்கள் மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்று இயங்குகிறது. இந்த பல்கலையின் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த பட்ட படிப்புகளை படிக்கின்றனர். மேலும் குறைந்த அளவிலேயே கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தொலைநிலை கல்வியை சிறப்பாக நடைமுறைபடுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த ஆன்லைன் தேர்வில் 19,000 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். பல்கலைக்கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கால அட்டவணையின் படி தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வின் முடிவுகள் https://exam.tnouniv.com/result21/ என்ற இணையதளத்தில் வெளியிப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் மாணவர்களுக்கு அனுப்பபடும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மறு மதிப்பீடு விவரங்களும் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.