HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ATM கார்டு இன்றி பணம் எடுக்கும் வசதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 30, 2021

Comments:0

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ATM கார்டு இன்றி பணம் எடுக்கும் வசதி!

வங்கி வாடிக்கையாளர்கள் ATM மற்றும் டெபிட் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வாய்ப்புகளை HDFC வங்கி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சில முக்கிய வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ATM இன்றி பணம் எடுத்தல் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான சேவை மற்றும் சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் HDFC வங்கி, தனது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது மேற்கொள்ளும் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வை வழங்கியுள்ளது. அதாவது HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் ATM மூலம் பணம் எடுக்க விரும்பினால் டெபிட் கார்டுகள் இல்லாமலும் இவ்வகை சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக ‘அட்டை இல்லாமல் பணம் எடுத்தல்’ (Cardless Cash Withdrawal) என்றதொரு செயல்முறையை வகுத்துள்ளது. அதாவது HDFC பயனர்கள், வங்கி ATM களில் இருந்து பணம் எடுக்க வரும்போது டெபிட் அல்லது ATM கார்டுகளை எடுத்துச் செல்ல தவறினாலும் இப்போது கார்டுகள் இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ள முடியும் என HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளது.

இந்த சேவைகள் உடனடி மற்றும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க, முதலில் நெட்பேங்கிங் சேவைகளில் பயனர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பின்பாக நெட் பேங்கிங்கில் உள்நுழைந்து Funds Transfer என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Request என்ற ஆப்ஷனை அணுகவும். அடுத்து Add beneficiary என்ற ஆப்ஷனில், Cardless Cash withdrawal சேவையை தேர்வு செய்யவும். பின்னர் பயனரின் விவரங்களை உள்ளிட்டு, Add and Confirm என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இறுதியாக, மொபைல் எண்ணை உறுதிசெய்து, OTP எண்ணை உள்ளிடவும். இந்த செயல்முறைகளை முடித்த 30 நிமிடங்களுக்குப் பின்னாக பயனரின் விவரங்கள் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பணம் அனுப்ப விரும்பினால், முதலில் நெட்பேங்கிங்கில் உள் நுழைந்து, Funds Transfer என்பதை தேர்ந்தெடுத்து Cardless Cash Withdrawal எனும் ஆப்சனுக்கு செல்லவும். உங்களது டெபிட் வங்கி கணக்கு மற்றும் பணம் செலுத்தவுள்ள பயனாளியை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் விவரங்களை சரிபார்த்து தொகையை உள்ளிடவும். அடுத்து மொபைல் எண்ணை உறுதிசெய்து, பரிவர்த்தனையை சரிபார்க்க அனுப்பிய OTP எண்ணை உள்ளிடவும். பணத்தை திரும்பப் பெறுவதற்கு, ATM ல் Cardless Cash விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, IDLE திரையில் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்கவும். அடுத்து, OTP, பயனரின் மொபைல் எண், ஆர்டர் ID மற்றும் தொகை போன்ற விவரங்களை தொடர்ச்சியாக உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், நீங்கள் பதிவு செய்த தொகையை இயந்திரம் வழங்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews