CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.37% பேர் தேர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 30, 2021

Comments:0

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.37% பேர் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்தபடி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 99.37% பேர் தேர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்பட வேண்டிய CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக மத்திய இடைநிலை கல்வி (CBSE) அறிவித்தது. அதன்படி இன்று (ஜூலை 30) பிற்பகல் 2 மணியளவில் CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னமே அறிவித்திருந்தபடி, CBSE தேர்வு முடிவுகள், கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான CBSE 12ம் வகுப்பு தேர்வில் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது 99.13% மாணவர்கள் மற்றும் 99.67% மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 17,016 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 99.92% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 5.37% மாணவர்கள் 95% மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான முடிவுகள், மாற்று மதிப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அதாவது 30:30:40 என்ற வகையில் கணக்கிடப்பட்டு இறுதி முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் இறுதியானதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews