Breaking

Thursday, July 15, 2021

பணியாளர் தொகுதி - பணியாளர்கள் ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையரகம் சுற்றறிக்கை

நாள்.13.07.2021.
ஆதிதிராவிடர் நல ஆணையரகம், சென்னை-5.
சுற்றறிக்கை

பொருள்

பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் நல ஆணையரகம் மாவட்டத்தில் பணிபுரியும் - பணியாளர்கள் -ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக.
மாவட்டங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளணிகள் (ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள்) மற்றும் சங்க நிர்வாகிகளும் எவ்வித முன் அனுமதியும் இன்றி ஆணையரகத்திற்கு வருகை புரிவதால் ஆணையரகத்தில் பணி நடைபெறுவதில் தேக்க நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆதிதிராவிடர் நல ஆணையரசு அழைப்பாணை இல்லாமல் பிற காரணத்திற்காக ஆணையரகத்திற்கு வருகை புரிவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்பே வருகை புரியுமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எந்த வித முன் அனுமதியும் இன்றி ஆணையரகத்திற்கு மாவட்ட பணியாளர்கள் வருகை புரிந்தால் பணியாளர்களிடம் விளக்கம் கேட்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இச்சுற்றறிக்கையை தங்கள் மாவட்டங்களில் பணியுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் சுற்றறிக்கைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog