Breaking

Monday, July 19, 2021

மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு விவகாரம் – மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு!!

தமிழக மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69% இடஒதுக்கீடு என்ற முறை நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படுமா என்று மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு:

தமிழகத்தில் அனைத்து தரப்பு மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என சட்டம் இயற்றப்பட்டு, இது அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணையில் நீதிபதிகள், இந்த இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது சாத்தியமாகாது என்று தெரிவித்தனர். நடப்பு ஆண்டில் இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை அறிவித்த பின்னர் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. இதில், மத்திய அரசை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையை இன்னும் ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog