கொரோனா பாதிப்பு குறைவு எதிரொலி! - பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

கொரோனா பாதிப்பு குறைவு எதிரொலி! - பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்.

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.


பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகின்றது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவால் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் மாநிலங்களின் பட்டியலை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிஷா:

ஜூலை 26 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசாவின் பள்ளி மற்றும் வெகுஜன கல்வியின் முதன்மை செயலாளர் சத்யபிரதா சாஹு, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக 40% மாணவர்கள் மட்டுமே கற்றல் நிலையை அடைகின்றனர். மீதம் உள்ள 60% மாணவர்களால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே ஜூலை 26 முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.


மஹாராஷ்டிரா:

ஜூலை 15 முதல் 8 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாத பகுதிகளில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் இல்லாத கிராமங்களில் 335 பள்ளிகள் மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பீஹார்:

ஜூலை 12 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களுக்கு 50% வருகையுடன் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மாநிலத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா:

ஜூலை 16 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு ஹரியானாவில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஜூலை 23 முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட இருக்கிறது. இருப்பினும், பள்ளிகளில் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் தங்களது பெற்றோரின் அனுமதி கடிதத்தை கொண்டு வர வேண்டும். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


குஜராத்:

ஜூலை 15 முதல் 50% மாணவர்களுடன் 12 ஆம் வகுப்புக்கான நேரடி வகுப்புகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.


தெலுங்கானா:

மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்த நிலையில், கோவிட் -19 இன் மூன்றாவது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்ததை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம்:

ஜூலை 26 முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் 50% மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்பு கூறியிருந்தார். கோவிட் -19 தொற்றுநோயைப் பொறுத்து ஆரம்ப வகுப்புகள் படிப்படியாக மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். ஆரம்பத்தில் பள்ளிகள் வாரத்தில் 4 நாட்களும், பின்னர் வாரத்தில் 6 நாட்களும் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.


ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திர மாநிலத்தில் ஜூலை 12 முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது, ஆகஸ்ட் 16 முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews