மூன்றாண்டுகள் கழித்து மாநில அளவிலான &'செட்&' தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவு விடுபட்டுள்ளதால் அப்பாடம் படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநில அளவில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதி நிலைத் தேர்வு அறிவிப்பு 2018 ல் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை நோடல் மையமாக செயல்பட்ட போது வெளியானது. அந்த அறிவிப்பில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹோம் சயின்ஸ், லைப் சயின்ஸ் உட்பட 26 வகை பாடப்பிரிவுகளில் முதுநிலை பயின்றவர்கள் தேர்வெழுதலாம் என வெளியிடப்பட்டிருந்தது.
இடையில் மூன்றாண்டுகளாக உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வு நடத்தப்படவில்லை.2021 க்கான விண்ணப்ப அறிவிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவு சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து மதுரை காமராஜ் பல்கலையின் யு.சி.ஜி. போர்டு ஆப் ஸ்டடீஸ் தலைவர் வசந்தா எஸ்தர் ராணி கூறுகையில், &'&'தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் ேஹாம் சயின்ஸ் பாடம் நடத்தப்படுகிறது.
முதன்முறையாக இந்த பாடம் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது&'&' என்றார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.