Breaking

Thursday, June 03, 2021

ஆசிரியர் போர்வையில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம் - 'பிக்பாஸ்' ஆரி கொந்தளிப்பு

ஆசிரியர் போர்வையில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம் - ஆரி கொந்தளிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பல்வேறு புகார் எழுந்தன.
இந்த புகார்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும், இதனை கண்டித்து கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், இதுகுறித்து ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளர், நடிகர் ஆரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆசிரியர் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம் என்றும் ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை இதுபோன்றோருக்கு பாடமாக இருக்கட்டும்" எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog