Breaking

Tuesday, June 15, 2021

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை - செய்தி வெளியீடு எண்:277 - நாள்:15.06.2021

செய்தி வெளியீடு எண்:277
நாள்:15.06.2021
செய்தி வெளியீடு
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை!
பள்ளிகளில் பயின்ற சேர்க்கையில் 7.5 படிப்புக்கான மாணவர் சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல் / படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி அரசுக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையை சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, மாண்பமை தில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15-6-2021) உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog