ஜூன் 23 மற்றும் ஜூன் 24ஆம் தேதி பொதுமக்கள் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
சென்னையில் இதுநாள் வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் 89,500 நபர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் நபர்களுக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு இதுவரை 30,480 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 59,000 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.
• ஜூன் 23 மற்றும் ஜூன் 24ஆம் தேதி கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ஏற்பாட்டிற்காக 62,050 கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனைத்துத் தடுப்பூசி மையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. • பொதுமக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்கள், மையங்கள் குறித்த தகவல்களை https://bit.ly/3j36LkU என்ற இணையதள இணைப்பின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.
கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களைக் கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.