Breaking

Tuesday, June 01, 2021

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது குறித்த மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் செய்திக் குறிப்பு - செ.வெ.எண்.184 - நாள் 01.06.2021

கோயம்புத்தூர் மாநகராட்சி பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்.184
நாள் 01.06.2021
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது குறித்த மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் செய்திக் குறிப்பு
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு உத்திரவு அமுலில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள். பழங்கள். மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை எண்.386 நாள் 22.05.2021 மற்றும் அரசு முதன்மை செயலாளர் (மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை) அவர்களின் கடிதம் எண்.7248/கால்நடை/2021 நாள் 26.05.2021-ன்படி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களை மாநகராட்சி பகுதியில் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: மக்கள் தொடாவு அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog