மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை 06.06.2021 வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை (வாலாயம்) எண்: 84 - நாள்: 31.05.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை 06.06.2021 வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை (வாலாயம்) எண்: 84 - நாள்: 31.05.2021

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொரோனா வைரஸ் (Covid-19) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு - 07.06.2021 காலை 6.00 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை 06.06.2021 வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண்: 84 - நாள்: 31.05.2021
ஆணை:
மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு 30.05.2021 வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றினை (COVID-19) கட்டுப்படுத்தும் நோக்கில், 07.06.2021 காலை 6.00 மணி வரை முழு ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வரசாணையில் ஏனைய கட்டுப்பாடுகளுடன், அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், 31.05.2021 முதல் 06.06.2021 வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி ஊரடங்கு காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து ஆணை வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை கவனமாக பரிசீலித்த பின்னர் அரசானது, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு ஏற்கனவே 30.05.2021 அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து 06.06.2021 வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews