தமிழகத்தில் +12 பொது தேர்வு - ரத்து செய்யலாமா ? தேர்வை நடத்தலாமா என்பது தொடர்பாக கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

21 Comments

தமிழகத்தில் +12 பொது தேர்வு - ரத்து செய்யலாமா ? தேர்வை நடத்தலாமா என்பது தொடர்பாக கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் +12 பொது தேர்வு - ரத்து செய்யலாமா ? தேர்வை நடத்தலாமா என்பது தொடர்பாக கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும்.
இரண்டு நாட்களில் கருத்துக்கள் கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும்
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான +2 தேர்வை ரத்து செய்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறை அதிகாரிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, CBSE +2 தேர்வை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெளிவு இல்லை என்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள், கல்வியாளர்கள் என்று அனைவரின் கருத்தைக் கேட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் பேசினார்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களை இன்றும், நாளையும் கேட்டறிந்த பின், பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்றும், மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், +2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை பதிவு செய்ய மின்னஞ்சல் முகவரியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என்றும், 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
(( பேட்டி : அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ))

21 comments:

  1. Pls cancel the exam ..... Students uyir tha mukkiyam so pls students Nalan karuthi exam cancel pannirunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Exam vendam cancel pannirunga plzzz

    ReplyDelete
  3. Pls cancel the exam🙏🙏🙏😞

    ReplyDelete
  4. Cancel the exam and conduct entrance for college admission

    ReplyDelete
  5. Please keep the public exam it only determine our life

    ReplyDelete
  6. Plzzz cancel the exam we can't even able to pass

    ReplyDelete
  7. Pls cancel 12th exam bcz we are in fear of covid

    ReplyDelete
  8. Please cancel the exam 😢

    ReplyDelete
  9. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா குறைந்த பிறகு தேர்வு எழுத வைக்கலாம். ஏனெனில் இந்த தேர்வை வைத்து அவர்கள் அறிவுதிறன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்

    ReplyDelete
  10. Can be conducted the examination. Then only we can get ingenuity. After the COVID

    ReplyDelete
  11. Sir please sir cancel exam 😞 Enime exam vacchalum yelutha mudiyathu sir 😣 eppudiyum nalla mudiva sollunga sir 😞neraiya peruku cancel panna tha sir virubam 👍

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews