தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல் எதிரொலி – நோட்டு புத்தகங்கள் தேக்கம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 03, 2021

Comments:0

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல் எதிரொலி – நோட்டு புத்தகங்கள் தேக்கம்!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் நோட்டு, புத்தகம் மற்றும் எழுது கருவிகள் தயாரிக்கும் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல குழந்தைகள் விளையாட்டு பொருள்கள் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா மையம் நோட்டு புத்தக தொழிலாளர்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி குறைந்து விட்டது. இதனால் நோட்டு புத்தக தொழிலாளர்கள், எழுது பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள புத்தக தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கொரோனா காரணமாக குழந்தைகள் வெளியில் செல்ல முடியாத நிலையினால் வீட்டிலேயே விளையாட பொருள்கள் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளிகளில் தேவைப்படும் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் தற்போது விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். RTI கேள்விக்கு 9,000 பக்க பதில்
இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், “2019 ஆம் ஆண்டு மூலப்பொருள்கள் விலை ஏற்றம் காரணமாக நோட்டு புத்தகங்கள், கையேடு விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் நோட்டு புத்தக விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் விற்பனை முற்றிலுமாக முடங்கி விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். வருகிற கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்படும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews