WhatsApp வாயிலாக கொரோனா தடுப்பூசி மையங்கள் – புதிய வசதி அறிமுகம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 03, 2021

Comments:0

WhatsApp வாயிலாக கொரோனா தடுப்பூசி மையங்கள் – புதிய வசதி அறிமுகம்!!

கொரோனா தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை நமது வாட்ஸ்ஆப் மூலமாக தெரிந்து கொள்ளும் நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசியினை உடனடியாக போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது மக்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் வாயிலாக அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்கும் வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் இதோ,
முதலில், உங்களது மொபைலில் 9013151515 என்ற எண்ணை சேமிக்க வேண்டும். அதன் பிறகு, வாட்ஸ்ஆப்பில், சேமித்து வைத்துள்ள அந்த எண்ணிற்கு “நமஸ்தே” என்று ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பியதும், பின் கோட் குறித்து கேள்வி கேட்கப்படும். அதற்கு பின், அந்த சுற்றுவட்டார தடுப்பூசி மையங்கள் குறித்த விவரம் அனுப்பப்படும். இதன் மூலமாக எளிமையாகவே தடுப்பூசி மையங்கள் குறித்த விவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews