Breaking

Thursday, May 06, 2021

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? நாளை அமைச்சரவை கூட்டம்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டம்: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் மே 2ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்க உள்ளது. அதன் தலைவர் முக ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நாளை காலை 9 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மேலும் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 15 புதுமுகங்கள் இடம் பெற்று உள்ளனர். இந்நிலையில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் மாலை 4 மணியளவில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் நடைபெற உள்ள முக்கிய கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog