Breaking

Thursday, May 06, 2021

கொரோனா நோயாளிகளுக்கு ரூ.42,000 – ஹரியானா மாநில அரசு அறிவிப்பு!!

ஹரியானா மாநிலத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோருக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.42,000 வழங்கப்படும் எனவும், இது வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே என மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா உதவித்தொகை :
நாடு முழுவதும் கொரோனா இராண்டாம் அலை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. ஆனாலும் நோய் பரவல் நிலை கைமீறி சென்று விட்டது. இந்தியாவில் பாதிப்பு மற்ற நாடுகளை விட அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், அதனால் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அதை கொடுப்பதற்கு போதிய பணம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஹரியானா மாநில அரசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு வாரத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் எனவும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை என அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடந்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 வீதம் 7 நாள்களுக்கு ரூ.7,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு சார்பில் இருந்து மருத்துவ செலவிற்காக ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். இது வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog