தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இடையில் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் ஜனவரி 18ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 9ம் தேதி முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.
பின்னர் நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் மறுஉத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை வகுப்புகள் மாணவர்களின் கல்வித்திறனை எந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது என்பது கேள்விக்குறியே. மேலும் மாணவர்களும் இதில் அதிகளவு ஆர்வம் காட்டாத காரணத்தால் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது கொரோனா 2வது அலை பரவி வருவதால் அடுத்த கல்வியாண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வழி பாடங்களே தொடரும் என கூறப்படுகிறது. மேலும் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று உள்ள அரசு கொரோனா வழிகாட்டுதல்களுடன் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டில் ஆவது பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Search This Blog
Thursday, May 06, 2021
Comments:0
Home
PEOPLE'S
SCHOOLS
TAMILNADU
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – பெற்றோர்கள் கவலை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – பெற்றோர்கள் கவலை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.