Breaking

Wednesday, May 12, 2021

சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தர வதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மாவட்ட அளவில் காவல் கண்காணிப்பாளருக்கு உதவும் வகையில், சட்ட ஆலோச கர் நியமிக்கப்பட உள்ளார். இந்த பணியிடத்துக்கு அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகத்தில் இளங் கலையுடன் சட்டப் படிப்பு அல்லது ஐந்தாண்டு சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்து, சட்ட அனுபவம், குற்றவியல் மத்திய தீர்ப்பாயம் அல்லது மாவட்ட நீதிமன்றம், உயர் நீதி மன்றத்தில் அனுபவம் பெற்றவ ராக இருக்கவேண்டும். விண்ணப் பதாரர், குற்ற வழக்கு எதிலும் சம்பந்தப்பட்டிருக்க கூடாது. தேர்வு செய்யப்படும் சட்ட ஆலோசகருக்கு தொகுப்பூதிய மாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, ப திறனுக்கேற்ப கால நீட்டிப்பு வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் வரும் 15-ம் தேதிக்குள், அலுவலக வேலை நாட்களில் நேரில் விண்ணப் பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog