உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக முன்னதாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் தீவிர கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. முன்னதாக உத்தரபிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாநில அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை ரத்து செய்வதற்கு அரசிடம் கோரிக்கைகள் வைக்கின்றனர். கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. கொரோனா நிலைமையை மறு ஆய்வு செய்த பின்னர் மே 20ம் தேதிக்கு பின்னர் தேர்வுகளை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும் என்று உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வரும் மே 20ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மே 20 ம் தேதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான தேதிகள் இன்னும் மாநிலத்தில் அறிவிக்கப்பட வில்லை.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.