மஹாராஷ்டிரா மாநிலத்தில் மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கான புதிய கல்வி ஆண்டு ஜூன் 14 ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக மே 15ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டு தொடக்கம் முதல் சரி வர பள்ளிகள் செயல்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வந்தது. அரசு அறிவுறுத்தலின் படி, கோடை விடுமுறை 76 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மே 1ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.