தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி ஒதுக்கீடு இல்லாததினால் சம்பளம் பெற இயலா நிலை - எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க கோருதல் - சார்த்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 09, 2021

Comments:0

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி ஒதுக்கீடு இல்லாததினால் சம்பளம் பெற இயலா நிலை - எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க கோருதல் - சார்த்து

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி ஒதுக்கீடு இல்லாததினால் சம்பளம் பெற இயலா நிலை - எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க கோருதல் - சார்த்து.
மதிப்பிற்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்கு வணக்கம்
தமிழகத்தில் கிட்டதட்ட 2,543 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவர்களுக்கு 2021 மார்ச் மாதம் சம்பளம் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை . சம்பளம் பெற்று தரும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடத்தில் கூறிய போது இன்னும் அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறவில்லை . கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்ற பிறகு சம்பள பட்டியல்களை அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஏராளமான ஆசிரியர்கள் வீட்டுக்கடன், தனிநபர் கடன் மற்றும் பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர். இத்தொகையானது ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் ECS மூலம் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே அவர்கள் பணம் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீடு அளிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews