தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 2: தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங் குவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு அறிவித்தபடி, தனியார் நடத்தும் கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டன அவற்றில் பணியாற்றியவர்களுக்கு முழுச் சம்பளம் வழங்குமாறும் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மிகப் பெரும்பாலான தனியார் கல்வி நிலைய நிர்வாகங்களின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உரிய ஊதியம் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களிடமிருந்து கல் விக் கட்டணங்களை அந்த நிறுவனங்கள் வசூ லித்தே வருகின்றன.எனவே தமிழ்நாடு அரசு இதில் தலை யிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.