மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை :
* 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை.
* 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்ததால் , 22.03.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட் -19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை.
* எனினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும்.
மேலும் , ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு , இது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகின்ற 01.05.2021 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
* எனினும் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை ( Guidance ) ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு Bridge Course Material மற்றும் Work book இல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும் , பயிற்சிகளை மேற்கொள்ளவும் , வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும் , இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள அலைபேசி , வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மாற்று வழிகள் ( Digital / Alternate Modes ) பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* மாணவர்கள் மேற்காண் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாட்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .
* அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும் , அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் , மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 2021 மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் , இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
* மேற்காண் வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Search This Blog
Wednesday, April 28, 2021
Comments:0
Home
DGE/DSE/DEE
IMPORTANT
PROCEEDINGS
SCHOOLS
TEACHERS
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
Tags
# DGE/DSE/DEE
# IMPORTANT
# PROCEEDINGS
# SCHOOLS
# TEACHERS
TEACHERS
Labels:
DGE/DSE/DEE,
IMPORTANT,
PROCEEDINGS,
SCHOOLS,
TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.