தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது அரசாணை – சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 28, 2021

Comments:0

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது அரசாணை – சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி பிறப்பித்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசிடம் பதில் கேட்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு வயது வழக்கு: அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த அரசாணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தியது. மீண்டுமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பலருக்கு அரசு வேலை கிடைக்காமல் போவதாக எதிர்ப்புகள் உருவாகியது. அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். அவர் அளித்துள்ள மனுவில், ‘அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் சரியான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் கொரோனா காரணமாக அரசு பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கூட வயது உச்ச வரம்பை தளர்த்தவில்லை’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews