புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய பல்கலைக்கழகம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம்? தலையங்கம் - 27.04.2021
பல்கலைக்கழகம் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த்தொற்று காரணமாக தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியிலும் நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதனால் அங்கு இரவுநேர ஊரடங்குடன், வார இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக புதுச்சேரியில் 54,026 பேர் பாதிக்கப்பட்டு, 758 பேர் பலியாகியுள்ளனர். இதனால் புதுச்சேரியில் இயங்கி வந்த பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செயல்பட்டு வந்த மத்திய பல்கலைக்கழகம் கடந்த 23 ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
அஞ்சல்தலை சேகரிப்பு முகாமில் பங்கேற்க ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
தற்போது கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து வருவதால் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 3 நாட்களுக்கு மத்திய பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். மேலும் பல்கலைக்கழக அத்தியாவசிய பணிகளுக்கு தடை இல்லை என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.