அரசு பள்ளி மாணவர்களுக்கு 'கொரோனா கால கதாநாயகர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி - முதல் பரிசாக கையடக்க கணினி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 14, 2021

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'கொரோனா கால கதாநாயகர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி - முதல் பரிசாக கையடக்க கணினி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'கொரோனா கால கதாநாயகர்கள்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
PRESS RELEASE: NTA Declares CMAT 2021 NTA Scores
முதல் பரிசாக கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
PUBLIC NOTICE: Extending the Correction window for JEE (Main) - 2021 – Reg
இதன்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்த போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரை போட்டியும் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில், மாணவர்கள் கட்டுரை எழுதி, அதை பள்ளி ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். PRESS RELEASE: NTA Declares CMAT 2021 NTA Scores
ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் அனுப்பி வைக்கலாம்.இதில், முதல் பரிசாக, 7,000 ரூபாய் மதிப்புள்ள கையடக்க கணினியான 'டேப்லெட்' வழங்கப்படும். இரண்டாம் பரிசாக, 4,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்; மூன்றாம் பரிசாக அறிவியல், 'கால்குலேட்டர்' வழங்க வேண்டும் என, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews