SBI-நிலையான வைப்புத்தொகை மீது கடன் பெறுவது எப்படி ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 14, 2021

Comments:0

SBI-நிலையான வைப்புத்தொகை மீது கடன் பெறுவது எப்படி ?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிலையான வைப்புத் தொகையின் மீது கடன் வழங்குகிறது.வட்டி விகிதங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 11.04.2021 - PDF
நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்பிஐ (SBI)வங்கியில் அவ்வாறு கடன் பெற, வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். அதே சமயம் இந்த தொகையானது நம்முடைய வைப்புத்தொகையில் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலையான வைப்புத்தொகை மீது எப்படி கடன் பெறுவது?
எஸ்பிஐ(SBI) வங்கியில் நிலையான வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள தனிநபர் அல்லது கூட்டு வைப்புத்தொகையாளர்கள் கடன் பெற முடியும் ஆன்லைன் வங்கி கணக்கில் டிடிஆர் அல்லது எஸ்டிடிஆர் முறையில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்களும் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தலாம்.ஓவர் டிராஃப்ட் கணக்கை வைப்புத்தொகையாளர்கள் மின்னணு முறையிலேயே பயன்படுத்தலாம்.
PUBLIC NOTICE: Extending the Correction window for JEE (Main) - 2021 – Reg
விண்ணப்பம் வங்கியால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, கூட்டு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இருவருமே கடன் பெறும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஒருவர் கையெழுத்திட வில்லை என்றால் உங்களுடையை வங்கி விண்ணப்பத்தை நிராகரிக்கும். எஸ்பிஐ(SBI) வங்கியில் வரி சேமிப்புக்கான நிலையான வைப்பு கணக்கு வைத்திருந்தால் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது.
முக்கிய செய்தி: அனைத்து வங்கிகளின் RTGS சேவை 14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! கடனை திருப்பிச் செலுத்தும் காலம்
கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்பது பெற்ற கடன் தொகைக்கான வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்தும் காலம் ஆகும். கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஏற்படும்போது அதை தவிர்ப்பதற்காக கடன் பெறுவோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய திருப்பி செலுத்தும் காலமுறை ஒன்றை வங்கி பரிந்துரைக்கிறது. கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையை தீர ஆராய்ந்து இந்த காலமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எஸ்.டி.டி.ஆர் முறையின் கீழ் கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டு காலம் . அதுவே இ-எஸ்.டி.டி. முறையின் கீழ் கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டு காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 11.04.2021 - PDF
நிலையான வைப்புத் தொகையின் மீது கடன் பெறுவதில் உள்ள பலன்கள்
கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 1 சதவீதம் மட்டுமே கூடுதலாக இருக்கும். அதேபோல நீங்கள் திருப்பி செலுத்தும்போது செலுத்த வேண்டிய தொகை குறையும் பட்சத்தில் அதற்கான வட்டி மட்டும் வசூலிக்கப்படும். நிலையான வைப்பு தொகை மீது கடன்பெறும் வசதி மட்டுமல்லாமல் ஓவர் டிராஃப்ட் வசதியையும் எஸ்பிஐ(SBI) வழங்குகிறது. கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

எஸ்பிஐ(SBI) எஃப்.டி. மீது ஓவர்டிராஃப்ட் கணக்கு தொடங்குவது எப்படி?
ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஓவர்டிராஃப்ட் தொகை பெற முடியும். .அருகிலுள்ள எஸ்பிஐ(SBI) கிளையில் ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம் அல்லது இணையவழியிலும் தொடங்கலாம். மின்னணு முறையில் எஸ்பிஐ நிலையான வைப்பு தொகை மீது ஓவர்டிராஃப்ட் தொடங்கும் முறை
எஸ்பிஐ(SBI) நெட் பேங்கிங் கணக்கில் பயனர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும். அதில் மெனு பிரிவின் உள்ளே e Fixed deposit ஐ கிளிக் செய்யவும். இப்போது overdraft against Fixed deposit ஐ கிளிக் செய்யவும். பிறகு உங்கள் டெபாசிட் கணக்கு திரையில் வரும்.அதில் ஓவர் டிராப்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு வைப்புத்தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
PUBLIC NOTICE: Extending the Correction window for JEE (Main) - 2021 – Reg
அதன் பிறகு 'Proceed' என்பதைக் கிளிக் செய்து, ஓவர் டிராஃப்ட் தொகை, ஓவர் டிராப்ட்டில் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கடவுச்சொல்லைப் பெறுவீர்கள், தேவையான இடத்தில் அதை Enter செய்து அதை அங்கீகரிக்கவும். தற்போது உங்கள் கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews