Breaking

Wednesday, April 14, 2021

+2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசை வலியுறுத்தல் தொடர்பாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிக்கை - Dt: 14.04.21

கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகி வரும் வேளையில் 9.5 லட்சம் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த உள்ள மாணவர்கள் ஆகியோர் நலன் கருதி +2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்வுப்பணிக்கு வரும் ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன் படுத்துகின்றனர். தேர்வு மையங்களிலும், விடைத்தாள் திருத்தும் மையங்க்களிலும் நோய் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தேர்வு அறைகளில் மாணவர்கள் கைக்குட்டை கொண்டு செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. பல பள்ளிகள் கொரோனா தடுப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீரழிவு மற்றும் பல்வேறு இணை நோய் உள்ள ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அனைத்துப் பள்ளிகளுக்கும் (தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை) கோடைகாலம் மற்றும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை அறிவிக்க வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog