Breaking

Monday, February 01, 2021

1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நியமிக்கும் பணி துவக்கம்

தமிழகம் முழுதும், 1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, தமிழகம் முழுதும், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களை சார்ந்து, ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்படுகின்றனர்.பல ஆண்டுகளாக, புதிய ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்களின் உரிமம் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன. பத்திரப்பதிவுக்கு வரும், மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள அளவுக்கு, இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு:பதிவுத்துறையில் காலியாக உள்ள, 1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது. நெறிமுறைகள், உரிய நடைமுறைகளை பின்பற்றி, காலியிடங்களை நிரப்ப, மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம். முத்திரை சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கல்வித்தகுதி, முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வ நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக, முறையாக அறிவிக்கை வெளியிடப்படும்.இதன் அடிப்படையில் விண்ணப்பம் பெற்று, நேர்முக தேர்வு நடத்த, உரிய அறிவுறுத்தல்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog