அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப்.8ந்தேதி முதல் முழுமையாக திறக்கப்படும்.
2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ந்தேதியும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ந்தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch., ஆகிய படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ஆம் தேதியும், 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கும்.
மாணவர்களுக்கான விடுதிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று M.E., M.tech., MBA, MCA, M.Sc., ஆகிய படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, February 04, 2021
பிப்.8 முதல் வகுப்புகள் தொடக்கம்- அண்ணா பல்கலைக்கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.