Breaking

Saturday, June 27, 2026

7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கிடையாது - கல்வி அமைச்சர் திடீர் விளக்கம்



This Tamil newspaper clipping clarifies that the three-language policy does not apply to students in classes 7, 8, and 9.

Union Education Minister Dharmendra Pradhan stated the policy is only mandatory for Class 6 students in CBSE schools starting this academic year.

Students in classes 7 through 9 are advised to continue with their current two-language system until Class 10 to avoid confusion

7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கிடையாது

கல்வி அமைச்சர் திடீர் விளக்கம் No three-language policy for students in classes 7, 8, and 9 – Education Minister's sudden clarification.

புதுடில்லி, ஜூன் 27

''சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழி கொள்கை பொருந்தும். 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது," என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை - 2020ன்படி, சி.பி. எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முதல், மும்மொழி கொள்கை அமலாகிறது. அதன்படி, மாணவர்கள் இரு இந்திய மொழிகளையும், ஒரு வெளி நாட்டு மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போது, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிப்பதால், ஒரு இந்திய மொழிக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பெற்றோர் மத்தியில் குழப்பமும் நிலவியது.

இந்நிலையில், தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டி:

எந்த வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை அமலாகிறது என்பதை சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெளிவாக குறிப்பிடாததே குழப்பத்துக்கு காரணம். நடப்பு கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழி கொள்கை பொருந்தும். இதில், இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழி கொள்கையின்படியே, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள், 10ம் வகுப்பு வரை படிக்கலாம். இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.

இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிக்கையை சி.பி.எஸ்.இ., வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog