Breaking

Thursday, January 21, 2021

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிப்பு – குழு அமைப்பு

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் தயாரிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்பட உள்ளன.
பொதுத்தேர்வு வினாத்தாள்: கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்களின் சுமையை கருத்தில் கொண்டு 40% அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இது குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கடினமாக கேள்விகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் இருந்து தான் பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார். தற்போது பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு விபரங்கள் வெளியிடப்பட்ட்டு உள்ளதால், அதன் அடிப்படையில் வினாத்தாளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மீதமுள்ள 60% பாடத்திட்டத்தில் இருந்து மாதிரி வினாத்தாள்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு அடுத்த மாதத்தில் மாதிரி தேர்வு நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாக்களில் மாணவர்கள் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் சில கேள்விகள் இடம் பெற்று இருந்தது. அதுபோன்ற வினாக்கள் இந்த ஆண்டும் இடம் பெறும் என கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog