Breaking

Thursday, January 21, 2021

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – 2000 பேர் விண்ணப்பம்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான யுபிஎஸ்சி தேர்விற்கு, மதுரை பல்கலைக் கழகம் சார்பாக 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎஸ், ஐஏஎஸ் பயிற்சி வகுப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு, ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கு தற்போது வரை 2000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி: சிவில் சர்விஸ் தேர்வுகள் மூலம் குடிமைப்பணி அதிகாரிகளாகும் மாணவர்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இது இந்த ஆண்டு 9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை சரிசெய்ய தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இலவச பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களுக்கான தேர்வு வருகிற ஜனவரி 31-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு தற்போது வரை 2000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் விண்ணப்பித்த மாணவர்களில் 100 பேர் மட்டும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான ஒதுக்கீட்டில் 31% பொதுப்பிரிவினருக்கும், 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 19% SC/ST வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog