Breaking

Thursday, January 21, 2021

தமிழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – மீண்டும் மூடப்படுமா பள்ளிகள்?

தமிழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – மீண்டும் மூடப்படுமா பள்ளிகள்?? தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதே மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் கொரோனா: கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் பெற்றோர்களின் சம்மதம், ஆசிரியர்களின் கோரிக்கை, தனியார் பள்ளிகளின் வலியுறுத்தல் ஆகிய காரணங்களுக்காக ஜனவரி 19ம் தேதி முதல் திறக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் தும்பல் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog