தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடப்பட்ட நிலையில், காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி நடத்தப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு:
மருத்துவ படிப்புகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 31-ஆம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. இந்த அறிமுக வகுப்பில் மாணவர்கள் எந்த மாதிரி பாடங்கள் கற்றுக் கொள்ள உள்ளனர், அவர்களின் பாடத்திட்டங்கள் என்ன என்பது குறித்து வகுப்புகள் நடத்தப்படும். மேலும் மருத்துவ கல்லூரிகளில் அதிக ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளதால், அதனை தடுக்கும் வகையில் மாணவர்களின் விழித்திரை மற்றும் இடது பெருவிரல் கைரேகை போன்றவை எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளில் மீண்டும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மருத்துவ கல்வி இயக்கம் சார்பில், தமிழகத்தில் மீதமுள்ள 117 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கும், 459 பிடிஎஸ் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டதும் விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Thursday, January 21, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.