Breaking

Sunday, December 13, 2020

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வு நடத்தலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. மாணவர் சேர்க்கைக்கு பிறகு, தேவையான ஆசிரியர்களை தவிர கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் காலி இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் 50 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கான அட்டவணை 2 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்காதது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளது பற்றி கேட்டபோது, ‘‘நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியான நேரத்தில் சரியான காலத்தில் செய்து வருகிறோம். இதனால், இப்போது வெள்ளை அறிக்கை தேவையற்ற ஒன்று’’ என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog