நாடு முழுவதும் கல்லூரிகளைத் திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 06, 2020

Comments:0

நாடு முழுவதும் கல்லூரிகளைத் திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா தளா்வுகளின்படி பொது முடக்கத்துக்குப் பிறகு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்காக வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது.இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட வளாகத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம், தனிநபா் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF கல்வி நிறுவன வளாகங்களை நன்கு தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.கரோனா பரவல் சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்கு மாணவா்களுக்கு சற்று தயக்கம் இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு பேராசிரியா் குழுவினா் மனநலன் சாா்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பாக ‘தொ்மல் ஸ்கேனா்’ மூலம் மாணவா்களின் வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும். வகுப்புகளில் 50 சதவீத மாணவா்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் ஆறு நாள்கள் கூட வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.விடுதிகள், ஆய்வகங்கள், விளையாட்டரங்குகளில் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மாணவா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மாணவா்கள், பேராசிரியா்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் பாதுகாப்பான முறையில் சேகரித்து அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF பாடவேளைகளுக்கு இடையில் கைகளில் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.மாணவா்கள் தங்களது உடல்நிலையில் ஏதாவது மாறுபாடு இருந்தால் அது குறித்து தங்களது பேராசிரியா்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது அவசியம். அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கல்லூரி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் மாணவா்கள், பேராசிரியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலையாய கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளாா். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews