Breaking

Monday, October 26, 2020

சான்றிதழ்கள் சரிபார்ப்பு: அரசு ஆசிரியர்கள் கொந்தளிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவது ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளி புதுார் ஊராட்சி ஒன்றியதொடக்க பள்ளி ஆசிரியர் ராஜேந்திரனின் சான்றிதழ் போலியானது என 21 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வித்துறை ஒதுக்கீட்டில் போலி கவுன்சிலிங் உத்தரவுடன் சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகத்தில் நியமனமானதும் கண்டுபிடிக்கப்பட்டது.கல்வித்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம் அடிப்படையில் முதற்கட்டமாக முதுகலை அரசு ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இதனால் உரிய தகுதியுடன் நேர்மையான முறையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குறிப்பாக 2013-14 மற்றும் 2014-15ல் டி.ஆர்.பி., மூலம் தேர்வானவர்களை சி.இ.ஓ., அலுவலகங்களில் நடந்த கவுன்சிலிங் மூலம் பணியில் சேர உத்தரவு வழங்கப்பட்டது.அதில் தேர்ச்சி பெறாத சிலர் போலி கவுன்சிலிங் உத்தரவுகளை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாக கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.இதையடுத்து தான் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. குறிப்பாக 2013 முதல் டி.ஆர்.பி., மூலம் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் உள்ளதை இச்சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog