7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதல்வர் இயற்றினார். இதன் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்துதான், நீட் தேர்வின் 180 கேள்விகளில், 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இ-பாக்ஸ் மூலம் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இந்த தேர்வை முதன்முறையாக எழுதி தோல்வியடைந்தவர்கள், 2-வது முறையாக எழுத வாய்ப்புள்ளது. அவ்வாறு எழுதும் மாணவர்கள், அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர முடியாது. தேவைப்பட்டால் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதலாம் என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews