அண்ணா பல்கலை. இறுதி பருவத் தேர்வு வினாத்தாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

அண்ணா பல்கலை. இறுதி பருவத் தேர்வு வினாத்தாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் இறுதி பருவத் தேர்வின், நேரம், கேள்வித் தாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி பருவத்தேர்வு வரும் 24-ம் தேதி முதல் தொடங்கி 29-ம் தேதி வரை இணையவழியில் நடைபெற உள்ளது. தேர்வு குறித்த புதிய அறிவிப்பை அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 12-1 மணி வரை, மதியம் 2-3 மணி வரை, மாலை 4-5 மணி வரை என 4 கட்டங்களாக தேர்வு நடைபெறும். இதை யொட்டி, வரும் 19, 20-ம் தேதி களில் மாதிரித் தேர்வு நடைபெற வுள்ளது. இந்த நாட்களில் பங்கு பெறாதவர்கள் 21-ம் தேதி மாதிரித் தேர்வில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் 4 அலகுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் 40 வினாக்கள் கேட்கப்படும். அவை அனைத்தும் மல்டிபிள் சாய்ஸ் கேள்வியாக இடம்பெறும். அதில் 30 வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்கவேண்டும். தேர்வுக்கு உள்நுழைய லாகின் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். தேர்வு முடியும் வரை அலு வலக பணியாளர்கள், மண்டல அதிகாரிகள், தேர்வு கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மாணவர் களை கண்காணிக்க வேண்டும். தேர்வு நேரத்தில் ஏதேனும் கேள்விகள், மின்சார துண்டிப்பு, மோசமான இணைய வசதி, கணினி பிரச்சினை போன்ற சிக்கல்கள் இருந்தால் அவற்றை உடனடி யாக சம்பந்தப்பட்ட துறைத் தலைவருக்கு தெரிவிக்கவேண் டும்.
வெப் கேமரா,மைக் இணைப் புடன் கூடிய லேப்டாப், செல் போன், டேப் ஆகியவற்றில் மாணவர்கள் தேர்வு எழுதலாம். அதேபோல், கருவியில் உள்ள கேமரா, தேர்வு நடைபெறும் ஒரு மணி நேரமும் இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews