சி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

சி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும். அந்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சி.பி.எஸ்.இ., நடத்தும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெறாத மற்றும் அதிக மதிப்பெண்களுக்காக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் துணைத் தேர்வுகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான தேர்வு நேற்று துவங்கி, 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள், கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பான வழக்கை, நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், சஞ்சீவ் கன்னா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வுவிசாரித்து வருகிறது. விசாரணையின் போது, அமர்வு கூறியதாவது: இரண்டு லட்சம் மாணவர்கள், துணைத் தேர்வை எழுதுகின்றனர். அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. அதுவும், தற்போதுள்ள இக்கட்டான காலகட்டத்தில், இந்த மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்வுகள் முடிந்த உடன், விரைந்து முடிவுகளை அறிவிக்க, சி.பி.எஸ்.இ., நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேருவதற்கான வாய்ப்புகளை அளிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக, இரு தரப்பும், வரும் 24ம் தேதி தங்களுடைய முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அமர்வு கூறியது.
விசாரணையின்போது, 'அக்., 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கும் வகையில், கல்வி ஆண்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என, யு.ஜி.சி.,தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'இந்த அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு லட்சம் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்' என, அமர்வு கடுமையுடன் குறிப்பிட்டது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews