கல்லுாரி கல்வி துறையில் 35 பேருக்கு இடமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

கல்லுாரி கல்வி துறையில் 35 பேருக்கு இடமாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லுாரி கல்வி துறையில், எட்டு இணை இயக்குனர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் உட்பட, 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
உயர்கல்வி துறை செயலர், அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை விபரம்:
* கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அந்தஸ்தில், எட்டு பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், திட்டமிடல் பிரிவுக்கு ராமலஷ்மி; நிதி பிரிவுக்கு தீபா ஆகியோர் இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் *கோவைக்கு கலைச்செல்வி; திருச்சிக்கு மேகலா; மதுரைக்கு பொன் முத்துராமலிங்கம்; திருநெல்வேலிக்கு லதா பூரணம் ஆகியோர் மண்டல இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் * கல்லுாரி கல்வி இயக்குன ராக முன்னர் கூடுதல் பொறுப்பு வகித்த, இணை இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் தர்மபுரி மண்டலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார் * ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, விழுப்புரம் அரசு கல்லுாரி முதல்வர் ரமா நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய முதல்வர்கள்
*விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரிக்கு, சிவகுமார்; திண்டுக்கல் பெண்கள் அரசு கல்லுாரிக்கு அனுராதா; ராமநாதபுரம் ராஜா சேதுபதி அரசு கல்லுாரிக்கு பால் கிரேஸ்; திருப்பூர் சிக்கன்னா அரசு கல்லுாரிக்கு கிருஷ்ணன் மற்றும் பெண்கள் கல்லுாரிக்கு, எழில் ஆகியோர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
சென்னை கல்லுாரிகள்
* சென்னை மாநில கல்லுாரி முதல்வராக கிருஷ்ணன்; ராணி மேரி கல்லுாரிக்கு உமா மகேஸ்வரி; வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லுாரிக்கு சுமதி; திருத்தணி அரசு கல்லுாரிக்கு விஜயலஷ்மி ஆகியோர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews