பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020 - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 16, 2020

Comments:0

பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020 - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006
முன்னிலை முனைவர் ச. கண்ணப்பன்
ந.க. எண் : 34421/எம்/இ1/2020
நாள் 16.09.2020
பொருள் : பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி - மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு

பார்வை : 1. அரசாணை நிலை எண் 246 ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DMII) துறை நாள் 20.05.2020
2. அரசாணை நிலை எண் 344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DMII) துறை நாள் 10.07.2020
3. அரசாணை நிலை எண் 396 ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DMII) துறை நாள் 31.07.2020
4. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 2348/கே/இ1/2020 நாள் 13.07.2020
5. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 23430/கே/இ1/2020 நாள் 05.08.2020 - <<<>>> பார்வை 1,2,3 ல் கண்ட அரசாணையின்படி பள்ளிகள், கல்லூரிகள், பள்ளி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கோவிட் 19 காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சார்ந்து பார்வை 4 மற்றும் 5ல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் மற்றும் இதர நலத்திட்ட பொருட்கள் வழங்கும்போதும், மாணவர்களுக்கு Video Lessons தரவிறக்ககம் செய்யும் போதும் மேற்கண்ட அரசாணைகளில் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு (SOP) நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டிருந்தது.
மேலும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது கண்டிப்பாக இவ்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், நுழைவாயிலில் சானிடைசர் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசுப் பள்ளியில் ன இலவச பாடநூல்கள் வழங்கும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் ஆகும். எனவே இனிவரும் காலங்களில், இலவச பாடநூல்கள், நோட்டுப் புத்தகம், சமூக நலத்துறையால் வழங்கப்படும் Dry ration ஆகிய சமயங்களில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கண்டிப்பாக கோவிட் 19 சார்ந்து அரசு வெளியிட்ட நிலையான செயல்பாடு வழிமுறைகள் குறிப்பாக நுழைவாயிலில் சானிடைசர் பயன்படுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளி பின்பற்ற வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி இயககுநர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துதனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews