'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க, மொபைல் போனுக்கு சகோதரிகளிடையே போட்டி ஏற்பட்டதால், நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம், 42; மனைவி சுமதி, 35. இவர்களது மகள்கள் நித்யஸ்ரீ, 19; சுபஸ்ரீ, 18; காவியா, 17.ஆறுமுகம் கோழிப் பண்ணை வைத்துள்ளார்.
நித்யஸ்ரீ, திருச்சியில் தனியார் கல்லுாரியில், டிப்ளமோ நர்சிங், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுபஸ்ரீ பிளஸ் 2, காவியா பிளஸ் 1 படித்து வந்தனர். பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.இவர்கள் வீட்டில், ஒரே ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்ததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க, சகோதரிகள் மூவருக்கும் இடையே போட்டி ஏற்படும்
. பெரும்பாலும் நித்யஸ்ரீயின் தங்கைகளே, மொபைல் போனை பயன்படுத்தி வந்தனர். நித்யஸ்ரீ, பெரும்பாலும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால், பாடத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்த நித்யஸ்ரீ, கடந்த, 25ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups